உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் "உலக பசி தினம்" முன்னிட்டு கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உணவு வங்கி கோயம்புத்தூர் (புட் பேங்க் கோயம்புத்தூர்) நிறுவப்பட்டது. வறுமை ஒழிக்கப்பட்டு, பசியற்ற தேசத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். 

இதனிடையே, வரும் மே 28ம் தேதி (நாளை) "உலக பசி தினத்தினை" முன்னிட்டு உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 



முன்னதாக இன்று (மே 27) கோவை புரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் கையெழுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இது சாதாரண கையொப்ப பிரச்சாரம் போல் இல்லாமல், மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.



இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியின் போது வழக்கமான கையெழுத்து பிரச்சாரம் போல் இன்றி புதுவிதமாக பத்திரத்தில் கையெழுத்திடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் "உணவினை வீணடிக்க மாட்டேன்" என்ற வாசகங்கள் அடங்கிய பத்திரத்தில் கையெழுத்திட்டு அதனை பெற்றுச் சென்றனர்.



இதுகுறித்து இந்நிகழ்ச்சியின் ஒருகிணைப்பாளர்கள் கூறுகையில், மக்கள் தங்களது வாழ்நாளில் உணவினை வீணடிக்காமல் இருக்கவே இதுபோன்ற பத்திரத்தில் கையெழுத்திடும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதில் கையெழுத்திடும் குழந்தைகள் சில வருடம் கடந்து மீண்டும் இந்த பத்திரத்தினை பார்க்கையில் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் உணவினை வீணடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்காகவே இவ்வாறான புதிய முறை கையாளப்பட்டுள்ளது" என்றனர்.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...